சமீபகாலமாக மலையாள திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் ஆடு ஜீவிதம்.
பிளஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ், அமலா பால் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். உண்மை கதையை மையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் எந்த அளவிற்கு ரசிகர்களை பூர்த்தி செய்துள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
கதாநாயகன் நஜீப் {பிரித்விராஜ்} தனது நண்பனின் மாமாவின் மூலம் சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக செல்கிறார். உதவியாளர் வேலைக்காக தான் செல்கிறோம் என மகிழ்ச்சியில் இருந்த பிரித்விராஜிற்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அடிமை வேலை கிடைக்கிறது.
இந்த வேலைக்காக நான் வரவில்லை, என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சி கதறுகிறார். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. என்ன செய்வது எது செய்வது என்று தெரியாமல், பல கொடுமைகளை அனுபவிக்கிறார். தப்பிக்க முயற்சி செய்தபோதும், தன்னை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் முதலாளியிடம் மாட்டிக்கொள்கிறார்.
இப்படி பல வருடங்கள் செல்ல, ஆளே மாறிப்போன நிலையில் அடிமை வாழ்க்கை வாழ்ந்து வரும் பிரித்விராஜுக்கு என்ன நடந்தது? இறுதியில் அவர் அங்கிருந்து தப்பித்தாரா இல்லையா? என்பதே ஆடு ஜீவிதம் படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
பென்யமின் எழுத்தில் உருவான ஆடு ஜீவிதம் நாவலை மையமாக வைத்து இயக்குனர் பிளஸ்ஸி அருமையான படைப்பை கொடுத்துள்ளார். அடிமையாக நஜீப் பட்ட கஷ்டங்களை தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் திரையில் காட்டியுள்ளார் பிரித்விராஜ்.
பாலைவனத்தில் தண்ணீருக்காக ஏங்கும் காட்சிகளும், சாலை {Road} எங்கே, சாலை கண்ணில் தெரியவில்லையே என பித்து பிடித்தது போல் திரியும் காட்சிகளும் நம் மனதை உறைய வைக்கிறது.
Youtube சேனலில் 1.50 மில்எப்படியாவது நம் குடும்பத்தை பார்த்துவிடமாட்டோமா என நம்பிக்கையுடன் பிரித்விராஜ் முயற்சி செய்யும் காட்சிகள் அனைத்துமே மெய்சிலிர்க்க வைக்கிறது. கண்டிப்பாக அவருக்கு தேசிய விருது உறுதி. இவை அனைத்தையும் தனது பின்னணி இசையில் நம்மை உணர வைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்.
அதே போல் உலக தரத்தில் அமைந்துள்ளது ஒளிப்பதிவாளர் சுனிலின் ஒளிப்பதிவு. குறிப்பாக பாலைவனத்தில் தண்ணீர் கிடைக்கும் காட்சிகளும், பிரித்விராஜ் கண்களில் சாலை தென்படும் போதும், ஒட்டகம் கண்ணில் பிரித்விராஜ் முகம் தெரியும் போதும் ஒளிப்பதிவு வேற லெவலில் இருந்தது.
எடிட்டிங் பக்கா. ஆனால், படத்தின் மிகப்பெரிய மைனஸ் என்றால் மெதுவாக செல்லும் திரைக்கதை தான். இது மட்டும் விறுவிறுப்பாக இருந்திருந்தால் படத்தில் குறை என்பதே இருந்திருக்காது.
அமலா பாலுக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், கிடைத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். பிரித்விராஜுடன் பாலைவனத்தில் போராடிய கோகுல், Jimmy Jean-Louis நடிப்பு பாராட்டுக்குரியது.
பிளஸ் பாயிண்ட்
பிரித்விராஜ் நடிப்பு
கோகுல், Jimmy Jean-Louis நடிப்பு
பிளஸ்ஸி இயக்கம்
ஒளிப்பதிவு
பின்னணி இசை
கதை
மைனஸ் பாயிண்ட்
மெதுவாக செல்லும் திரைக்கதை