கனடாவில் தற்போது நிலவிவரும் பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவானது மேலும் வலுவடையும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக அந்நாட்டின் டொராண்டோ பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், 50 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு காணப்படும் எனவும், பெப்ரவரி மாதத்தில் பதிவுசெய்யப்பட்ட 6.4 சென்டிமீட்டர் என்ற அளவிலும் காட்டிலும் அதிகம் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் “இன்று மதியம் அல்லது மாலையில் பனிப்பொழிவானது தீவிரமடையும்” என்று கனடாவின் சுற்றுச்சூழல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
50 சென்டிமீட்டர்வரை பனிப்பொழிவு
கடுமையான பனிப்பொழிவு காரணமாக, வாகன சாரதிகள் அவதானமாக செயற்படுமாறும் கூறப்பட்டுள்ளது . கனடாவின் பிரதான நகரங்கள் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள நகராட்சி பகுதிகளில் 10 சென்டிமீட்டர் வரை பனி பொழியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போது டொராண்டோவில் உள்ள பெரிய ஏரிகள் மற்றும் பிற இடங்களில் 50 சென்டிமீட்டர்வரை பனிப்பொழிவு காணப்படும் என கூறப்பட்டுள்ளது.
எனினும் டொராண்டோ மற்றும் ஒட்டாவா போன்ற நகரங்களில் அடுத்த வாரமளவில் மிதமான வெப்பநிலை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.