பொலிவிழந்த முகத்தை மீண்டும் பெற!

கோடைகாலத்தில் வெயில் அதிகமாக காணப்படுவதால் அதிலுள்ள பலமான கதிர்கள் நமது சருமத்தை பொலிவிழக்கச் செய்கின்றன.

இதனால் சருமம் தனது இயல்பான நிறத்தை இழக்கின்றது. சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் மூலம் முகம் மற்றும் கழுத்து பகுதியில் நிறம் மாறி கருமை அடையும்.

இந்த கருமையை போக்க சில எளிய வழிமுறையை தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

வழிமுறைகள்

வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனுடன் கொஞ்சம் தயிர் சேர்த்து மிகிஸியில் அரைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி வந்தால் முகத்தில் உள்ள கருமைகள் சுத்தமாக நீங்கும்.

ஆரஞ்சுப்பழத்தோலை வெயிலில் காய வைத்து அதை பொடியாக்கி அதனுடன் தயிர் கலந்து முகம் கழுத்து கால் பகுதியில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

கற்றாழை ஜெல்லுடன் கொஞ்சம் தேங்காய் பால் சேர்த்து வெயிலால் பாதிக்கப்பட்ட இடங்களில் பூசி வந்தால் அது மிகவும் நன்மை தரும். தக்காளியை நன்றாக அரைத்து அதை முகம் கழுத்து பகுதிகளில் பூசி வந்தால் கருமை நீங்கும் .

உருளைகிழங்கை அரைத்து எலும்மிச்சை பழசாறுடன் கலந்து கருமையான இடங்களில் அப்பிளை செய்ய வேண்டும்.

பப்பாளி சாறுடன் கொஞ்சமாக தேன் கலந்து முகத்தில் தடவி சிறுது நேரம் கழித்து கழுவினால் அது முகத்தில் நல்ல பொலிவை கொடுக்கும்.