ஸ்ரீலங்கன் விமான சேவையின் செயற்பாடு மற்றும் நிதி முன்னேற்றம் எதிர்வரும் 06 மாதங்களுக்குள் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இல்லையேல் சுமார் 6000 ஊழியர்களின் வேலையில் ஸ்திரமின்மை ஏற்படும் என, அதன் முகாமைத்துவ மற்றும் தொழிற்சங்கங்களுக்கு அமைச்சர் அறிவித்துள்ளார்.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சில் இன்று (11) காலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க டொலர்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பல வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடனில் சுமார் 510 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஈர்க்கக்கூடிய நிதி இருப்புநிலையுடன், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அடுத்த 6 மாதங்களில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
எனவே எதிர்வரும் 06 மாதங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தேவையற்ற செலவுகளை குறைத்து நிறுவனத்தில் சாதக நிதி நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும்.
அதற்காக நிர்வாகமும் தொழிற்சங்கங்களும் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.