எதிர்வரும் புத்தாண்டு காலங்களில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 700 அல்லது 800 ரூபாவாக உயரக்கூடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் தடை விதித்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், உலகில் பெரிய வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரத்திற்குள் இலங்கையும் அதனை எதிர்கொள்ள நேரிடும் என சுட்டிக்காட்டி உள்ளனர்.
வளைகுடா பகுதிக்கான ஏற்றுமதியை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதாக இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்வது மலிவாக இருப்பதாகவும், தற்போது இராஜதந்திர தலையீடு மூலம் துபாய் மற்றும் வங்கதேசத்துக்கு மட்டும் கோட்டா முறையில் பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தின் தலையீடு தேவை என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.