சாந்தனின் வித்துடல் தாங்கிய ஊர்திப்பவனி வல்வெட்டித்துறையை சென்று அங்கிருந்து ஆலடி வீதியூடாக தமிழீழத் தேசியத் தலைவரின் பூர்வீக இல்லம் அமைந்திருந்த வளாகத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது சாந்தனின் பூதவுடலுக்கு மக்கள் குவிந்த உணர்வுபூர்வமாக தமது அஞ்சலியை செலுத்தி விருகின்றனர்.
இதேவேளை இறுதி ஊர்வலமானது பொலிகண்டி வீதியூடாக எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை அடைந்து அங்கு சாந்தனின் வித்துடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
சாந்தனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் வல்வெட்டித்துறையில் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் 32 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த சாந்தன் தாயம் திரும்பவிருந்த நிலையில் சுகயீனம் காரணமாக கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி சென்னை ராவீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.