புடலங்காய் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றாகும். இது சிறந்த நிறைவான மருத்துவக்குணங்களை கொண்டிருக்கிறது.
புடலங்காயில் பல வகை உள்ளது, பன்றி புடலை, பேய்ப்புடலை, நாய்ப்புடலை, கொத்துப்புடலை என பல வகைகள் உண்டு. புடலங்காயை பெரும்பாலானோர் சமையலில் பயன்படுத்துவது குறைவு.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் பாரம்பரிய உணவை மறந்து நவீன உணவு மயப்படுத்தி பரவலாக காணப்படுவதால் ஆரோக்கியமான உணவை மறந்துவிட்டோம்.
அந்த வகையில் பாரம்பரிய உணவில் ஒன்றான புடலங்காயை ஜூஸ் செய்து குடித்தால் உடலுக்கு என்னனென்ன நன்மை கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
புடலங்காய்
1. மலச்சிக்கல் இருப்பவர்கள் ஒவ்வொரு நாளும் உணவில் புடலங்காய் பயன்படுத்தினால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
இதில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது குடல் இயக்கத்தை சீராக்கி மலத்தின் கடினத்தை குறைத்து மென்மையாக்கி வெளியேற்றுகிறது.
உணவில் சேர்க்க விரும்பாதவர்கள் புடலங்காய்ச் சாறை இரண்டு டீஸ்பூன் அளவு குடித்து வந்தால் மலச்சிக்கல் சரியாவதை உணரலாம்.
2. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த புடலங்காயை தாராளமாக உண்ணலாம். எடை குறைப்பில் இருப்பவர்கள் அதிக கலோரிகளை உண்ண கூடாது.
அதனாலேயே புடலங்காயை எடை குறைக்கும் திட்டத்தில் இருப்பவர்கள் உண்ணலாம். இதில் கலோரிகள் குறைவாக தான் இருக்கும்.
உடல் எடை குறைய வேண்டும் என்றால் வாரத்துக்கு 3 நாட்கள் புடலங்காய் பச்சடி அல்லது கூட்டு செய்து சாப்பிட்டால் எடை இழப்பு வேகமாக இருக்கும்.
3. உடலில் ரத்தமானது எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். புடலங்காய் ரத்த சுத்திகரிப்பில் மிகவும் சிறந்த ஒரு உணவாகும்.
இதில் இருக்கும் அதிக நீர்ச்சத்து காரணமாக உடலில் இருக்கும் அதிக உப்பு ரத்தத்தில் இருக்கும் நச்சு போன்றவற்றை சிறுநீர் வழியாக வெளியேற்றும்.
பித்தப்பை கோளாறு இருந்தால் அதை சரி செய்து மஞ்சள்காமாலை நோய் வராமல் தடுக்கும். இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஃப்ளேவனாய்டுகள் மற்றூம் கரோட்டிகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.