உயிருடன் இருக்கும் போதும் இறந்த பின்னரும் மக்களின் இதயங்களை வெல்வது இலகுவான காரியமல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்
இன்று (22) நாடாளுமன்றத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது சனத் நிஷாந்த இறக்கும் வரை அப்பகுதி மக்களின் மனங்களை வென்றவர் எனத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, அரசியல்வாதிகளுக்கு இது மிகவும் கடினமான விடயம் எனவும் குறிப்பிட்டார்.
ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க இரங்கல் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.