இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (22.02.2024) நாணயமாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306.53 ரூபாவாகவும், விற்பனை வீதம் 316.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 307.14 ரூபாவாகவும், விற்பனை வீதம் 316.81 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
ஸ்ரேலிங் பவுன்
ஸ்ரேலிங் பவுனின் கொள்முதல் வீதம் 385.48 ரூபாவாகவும், விற்பனை வீதம் 401.28 ரூபாவாகவும் காணப்படுகிறது.
இதேவேளை குவைட் தினாரின் பெறுமதி 1012.93 ரூபாவாக பதிவாகியுள்ளது.