வாடகை அடிப்படையில் வாகனங்களை பெற்று அவற்றுக்கு போலி ஆவணங்களை தயாரித்து வேறு நபர்களிடம் அடகு வைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ருவன்வெல்ல பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், இந்த வாகனங்கள் பல்வேறு முறைகேடுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்படும் போதும் சந்தேகநபர் வசம் இருந்த 05 வாகனங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.