அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணம், நீர்க்கட்டணம் மற்றும் பெறுமதி சேர் வற் வரி காரணமாக நாடாளாவிய ரீதியில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான வெதுப்பக உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.
பொருட்களின் விலை
வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்துள்ளமை, முட்டை விலை அதிகரிப்பு மற்றும் வெதுப்பக உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதில் இருந்து அதிகளவான நுகர்வோர்கள் விளகியுள்ளனர்.
இதன் காரணமாக வெதுப்பக உற்பத்தி தொழிற்துறை பின்னடைவைச் சந்தித்துள்ளதாக வெதுப்பக உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.