திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணித்த பெண்ணை அரச பேருந்து சாரதியும், பேருந்து நடத்துனரும் இடையில் இறக்கி விட்ட சம்பவம் விசனத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பெண் நேற்றையதினம்(18.02.2024) திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது பேருந்து சாரதி பேருந்தினை மிகவும் வேகமாக செலுத்தினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குறித்த பெண் உயிர் அச்சத்தால், பேருந்தை அளவான வேகத்தில் செலுத்துமாறு கேட்டுள்ளார்.
பேருந்து விபத்து
எனினும் குறித்த சாரதி அவ்வாறு மெதுவாக செலுத்த முடியாது என்றும், அந்த பெண்ணை கீழே இறங்குமாறும் வற்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில், சாரதியும் நடத்துனரும் இணைந்து அந்த பெண்ணை இடையில் இறக்கியுள்ளனர்.
இலங்கையில், அதிலும் குறிப்பாக வடக்கில் அண்மைக் காலமாக பேருந்து விபத்துக்காளானது மிகவும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
பேருந்தில் பயணிக்கும் பயணிகள் உயிரை கையில் பிடித்தவாறே பயணம் செய்வதாக மக்கள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.