பேருவளை – காலி வீதியில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள வங்கி ஒன்றில் திருடிய சந்தேக நபர் பேருவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (31) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இன்று (31) அதிகாலை 3.45 மணியளவில் சந்தேகநபர் ஒருவர் குறித்த வங்கியின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்து திருடியுள்ள நிலையில் இன்று (31) காலை 6.30 மணியளவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.