நம்முடைய பண்டிகைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. அந்த வகையில் போகி பண்டிகையானது பழையன கழிதல் புதியன புகுதல் என்பது தான் இதனுடைய தார்பரியமே.
இந்த நன்நாளில் நம் வீட்டில் இருக்கும் குப்பைகளையும் பழையதையும் மட்டும் தூக்கி எறிவதோடு நிறுத்தாமல், நம் மனதில் இருக்கும் குப்பைகளையும் பழைய கோபங்களையும் வெறுப்புகளையும் தூக்கி எறிய வேண்டும் என்பது தான் இதன் பொருளே.
இப்படி ஒவ்வொரு பண்டிகையை நாம் கொண்டாடும் போதும் அதற்கான பொருள் உணர்ந்து கொண்டாடும் போது பண்டிகையின் அர்த்தம் நமக்கும் விளங்கும்.
நம்முடைய அடுத்த சந்ததியினருக்கும் இதை தெளிவுபடுத்த வேண்டியது நம் கடமை.
அதே போல் எந்த பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றாலும் அதற்கு முதலில் நம்முடைய பொருளாதார நிலை சரியான முறையில் இருக்க வேண்டும்.
அப்போது தான் பண்டிகையும் மகிழ்ச்சியாக அமையும் நிம்மதியாகவும் கொண்டாட முடியும்.
பொருளாதார உயர்வடைய செய்ய வேண்டிய பரிகாரம்
போகி அன்று வாங்கக் கூடிய பொருட்கள் போகி அன்று காலையில் நம் வீட்டில் இருக்கும் தேவை அற்றத்தை எல்லாம் வெளியில் எடுத்து போட்டு கொளுத்துவோம்.
இது நம் பழங்காலத்திலிருந்து பின்பற்றக் கூடிய ஒரு முறை தான் சரி.
இதனால் நம் வீட்டில் இருக்கக் கூடியவற்றை வெளியில் போட்டு நம்முடைய தரித்திரத்தை ஒழிக்கிறோம்.
அன்றைய தினம் நாம் சில பொருட்களை வீட்டுக்குள் கொண்டு வரும் போது வீட்டில் உள்ள செல்வநிலை அதிகரிக்கும் என்று சில தாந்திரீக வழிமுறைகள் சொல்கிறது.
பணவரவை அதிகரித்துக் கொள்ள நம் உழைக்க வேண்டும். பொருள் சேர்க்க வேண்டும் என்பதெல்லாம் உண்மை தான்.
இறைவழிபாடும் இதற்கு பெருமளவு துணை புரியும் இதிலும் எந்த மாற்றமும் இல்லை.
இத்துடன் பண வரவுகளை அதிகரித்துக் கொள்ள செய்யக்கூடிய இந்த சூட்சம பரிகாரத்தையும் செய்யும் பொழுது பலன் சீக்கிரத்தில் கிடைக்கும் அந்த வழிமுறைகளின் படி நாளைய தினத்தில் சில பொருட்களை வாங்க வேண்டும்.
அது கல் உப்பு, மா இஞ்சி, மஞ்சள், நெய், கற்கண்டு இந்த ஐந்து பொருட்களில் ஏதேனும் ஒன்றை வாங்குவது சிறப்பானது என்று சொல்லப்படுகிறது.
அதுவும் இந்த பொருட்கள் எல்லாம் இன்றைய தினம் (14.01.2024) மதியம் 12 மணிக்குள்ளாக வாங்க வேண்டும்.
இது தான் இந்த சூட்சம பரிகாரத்தில் முக்கியமானது.
ஒரு நாளை நாம் இரண்டு வகையாக பிரிக்கிறோம். அதில் ஏறுமுகம் இரங்கு முகம் என்ற இரண்டு உண்டு.
அதாவது மதியம் 12 மணிக்கு முன்பான நேரம் ஏறு முகம் இதில் நாம் செய்யக்கூடியவை அனைத்து செயல்களும் நல்ல முறையில் பெருக்கமடையும் என்று சொல்வார்கள்.
அதே போல் மதியம் 12க்கும் மணிக்கு இறங்கு முகம். பெரும்பாலும் இந்த நேரத்தில் நல்ல காரியங்களை செய்வதை தவிர்ப்பார்கள்.
அதே போல தான் இன்று வாங்கக்கூடிய இந்தப் பொருட்களும் ஏறுமுக நேரத்தில் வாங்க வேண்டும்.
இது நம்முடைய வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் ஏற்றி செல்லவதோடு பணவரவை அதிகரித்துக் கொடுக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
இந்த ஒரு சூட்சம பரிகாரத்தை செய்வதன் மூலம் இத்தனை பலன்களை பெறலாம். இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் இதை செய்து நல்ல பலனை பெறுங்கள்.