கொழும்பில் டெங்கு நோயாளர்கள் அதிகம் காணப்படும் பல பகுதிகளில் நுளம்புகளைக் கட்டுப்படுத்த வோல்பேசியா வைரஸ் (Wolbachia Virus) தொற்றுள்ள நுளம்புகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த வேலைத்திட்டம் ஆய்வு மட்டத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்தார்.
அத்துடன் நாட்டில் நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை யாழ்மாவட்டத்திலும் டெங்கினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.