யாழ்ப்பாண வாரச்சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 3000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
முருங்கை காய்களின் அறுவடை கிடைக்காததாலும், ஏனைய வகை மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதால் , முருங்கையின் விலையும் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் முருங்கைக்காய் ஒன்றின் விலை 1000 ரூபாவாக உள்ளதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை 2500 ரூபாவாக காணப்பட்டது.
அத்துடன், யாழ்ப்பாணத்திலிருந்து பல மாகாணங்களுக்குச் செல்லும் பேருந்துகளிலும் முருங்கைக்காய் மூட்டைகள் ஏற்றப்பட்டிருந்தமை காணப்பட்டது.