இது ஏழைகளை பாதுகாக்கும் அரசாங்கமல்ல

இந்த வரிச்சுமையால் சிறார்கள் தலைமுறையே அதிகம் பாதிக்கப்படும் நேரத்தில்,அவர்களுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்து,கவனிப்பு மற்றும் பாதுகாப்பை வழங்க முடியாதுள்ளதாகவும்,

சர்வதேச நாணய நிதியத்தின் பிரகாரம் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பில்,சாமானிய மக்களின் நிதியங்கள் மற்றும் சேமிப்புகள் மீதே அதிக சுமை சுமத்தப்பட்டதாகவும், இதனால் பெரும் செல்வந்தர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும்,இன்று நாட்டில் பெரும் செல்வந்தர்களை பாதுகாக்கும் அரசாங்கமே தவிர சாதாரண மக்களை பாதுகாக்கும் அரசாங்கம் ஆட்சியில்  இல்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.


60% குடும்பங்களின் வருமானம் குறைந்து 91% செலவுகள் அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறான நிலையில் மனிதாபிமானமற்ற முறையில் VAT வரியை அதிகரித்து மக்களின் வாழ்க்கையை இந்த அரசாங்கம் அழித்து வருவதாகவும்,குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் போஷாக்கான உணவுகளுக்குக் கூட வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும்,இது வெட்கமற்ற மனிதாபிமானமற்ற செயல் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 60 ஆவது கட்டமாக கம்பஹா,வெரகொடமுல்ல மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று (05) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.