இன்று பெரும்பாலான நபர்கள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிவிட்டனர், மக்களுக்கு ஏற்றவாறு பல புதிய நுட்பங்களும் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறது.
இதில் உள்ள ஒரு சில அம்சங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.
உங்களது போனில் Flight Mode என்ற ஆப்ஷன் இருக்கும், இதுவெறுமனே விமானத்தில் பயணிக்கும் போது பயன்படுத்துவதற்காகவே என நினைக்கிறார்கள்.
ஆனால் இதனை பல வழிகளில் பயன்படுத்தலாம், இது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Techa Tungateja/Getty Images/iStockphoto
Flight Mode எதற்காக?
விமானத்தில் பயணிக்க தொடங்கும் முன், உங்களது போன்களை Flight Modeல் போடும்படி அறிவுறுத்துவார்கள்.
Flight Mode-யை ஒன் செய்ததும், உங்களது போனை அருகிலுள்ள cellular, WiFi networks, Bluetoothகளால் கனெக்ட் செய்ய முடியாது.
இதனால் எந்தவொரு அழைப்பும் வராது, சமூகவலைத்தளங்களில் செய்திகளை பகிர முடியாது, இணையத்தையும் பயன்படுத்த முடியாது.
ஆனால் போனை நீங்கள் பயன்படுத்தலாம், புகைப்படங்கள் எடுக்க, பாட்டு கேட்க, செய்திகளை தயார்செய்யலாம்.
மற்ற பயன்கள்
குறிப்பாக பற்றரியை சேமிக்க இந்த ஆப்ஷனை தாராளமாக பயன்படுத்தலாம், வயர்லெஸ் இணைப்புகளை துண்டிப்பதால் பற்றரி சீக்கிரம் தீர்ந்துவிடாது, இதனால் நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்த முடியும். பயணம் செய்து கொண்டிருக்கும் போது இந்த ஆப்ஷனில் போட்டுவிடுவது சிறந்தது.
இதேபோன்று உங்களுக்கு நேரம் குறைவாக இருந்து அதேசமயம் சீக்கிரம் பற்றரியை சார்ஜ் செய்ய விரும்பினால், Flight Modeல் போட்டுவிட்டு சார்ஜ் செய்யலாம்.
வேறு ஏதேனும் வேலைகளில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது இந்த ஆப்ஷன் உதவியாக இருக்கும்.
குழந்தைகளிடம் செல்போனை கொடுக்கும் போது Flight Modeல் போட்டுவிட்டு கொடுக்கலாம், தவறுதலாக குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தாமல் இது தடுக்கும்.
பலரும் பொது இடங்களுக்கு செல்லும் போது குறிப்பாக மருத்துவமனை, நூலகங்கள், ரயில் நிலையங்களில் இந்த ஆப்ஷனை தேர்வு செய்கிறார்கள்.
உங்களுக்கு ஏதேனும் நெட்வொர்க் பிரச்சனை இருந்தால், அதை மீட்டெடுக்க Flight Modeயை பயன்படுத்தலாம், இதன் மூலம் Wi-Fi, Bluetooth, Cellular Network Modeகளை மீட்டமைக்கிறது.