போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் சிறப்பானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கிரிந்திவெல பிரதேசத்தில் நேற்று (26.12.2023) ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மகிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இந்த அரசாங்கம் மிகச் சிறந்த வேலையை செய்கிறது என்று நான் நினைக்கிறேன். போதைப்பொருளால் இந்த நாடு அழிகிறது. இளம் தலைமுறை மறைந்து வருகிறது.
ஆளுங்கட்சியின் அதிகாரம்
எனவே, சோதனை நடத்தி போதைப்பொருள் பிடிப்பது மிகவும் நல்ல செயல் என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் எதிர்கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளதென ஊடகவியலாளர் ஒருவர் மகிந்தவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது இன்னும் எங்கள் கதை அல்ல. ஆட்சியைப் பிடிப்பது எங்கள் நம்பிக்கை. எதிர்க்கட்சிக்கு போகவில்லை.
அடுத்த தேர்தலில் ஆளுங்கட்சியின் அதிகாரம் கைப்பற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.