இணையதளம் மூலம் பேருந்து ஆசன முன்பதிவு செய்யும் சேவை வெற்றியடைந்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி மாதாந்தம் 77 000 பேர் சேவையைப் பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிடைத்துள்ள வருமானம்
அவர் மேலும் தெரிவிக்கையில், இச்சேவை மூலம் ஒரு வருடத்தில் மூன்றரை கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் நாடளாவிய ரீதியில் 5,300 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அத்துடன், புதிதாக 800 நடத்துனர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.