பம்பலப்பிட்டி பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தெஹிவளை, விஹாரை வீதியில் வசிக்கும் 23 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் புகையிரதத்தில் அடிபட்டாரா அல்லது புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.