2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பில் விராட் கோலி அதிகபட்சமாக 101 ஓட்டங்களை பெற்றதுடன் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கார் படைத்திருந்த சாதனையைும் சமன் செய்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கார் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களை பெற்றுள்ள நிலையில், அதனை இன்றைய தினம் விராட் கோலி சமன் செய்துள்ளார்.
அதேநேரம் Shreyas Iyer 77 ஓட்டங்களையும் Rohit Sharma 40 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் தென்னாப்பிரிக்க அணி சார்பில் Lungi Ngidi, Marco Jansen, Kagiso Rabada, Keshav Maharaj, Tabraiz Shamsi ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதன்படி தென்னாப்பிரிக்க அணிக்கு 327 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.