மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் செங்கலடி பகுதியில் இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கலடி மத்திய கல்லூரிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகைத் தருவதனை முன்னிட்டு மக்கள் அவ் வீதியில் ஒன்று திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள், பண்ணையாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அப் பகுதியில் பெருமளவான பொலிஸார் மற்றும் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வானில் ஹெலிகாப்டரும் வட்டமிடுவதை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதிக்குயில் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதுடன் பதற்றம் நிலவுகிறது.
நீர்த்தாரைப் பிரயோக வண்டிகளும் போராட்டக்களத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் நீதிமன்ற கட்டளை ஒன்றும் கிடைத்துள்ளதாகவும், அது வாசிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.