சீனாவின் ஷி யான் 6 எனும் உளவுக் கப்பல், கொழும்பு நோக்கிச் செல்வதற்காக மலாக்கா நீரிணைக்குள் பிரவேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஷி யான் 6 கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்தின் கப்பற்துறைக்கு செல்ல இலங்கை பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளதாக 2கடந்த மாதத்தில் தகவல் வெளியாகியிருந்தன.
இலங்கைப் பயணத்தை இரத்து செய்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்
எனினும், இந்த கோரிக்கை இன்னும் பரிசீலனையில் இருப்பதாகவும், அனுமதி வழங்கப்படவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளர் பிரியங்கா விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
சீனாவின் ஷி யான் 6 உளவுக் கப்பல் இலங்கையின் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கப்பல் கொழும்பில் நங்கூரமிட ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த மாதம் திட்டமிடப்பட்டிருந்த இலங்கைக்கான தமது பயணத்தையும் இரத்து செய்திருந்தார்.
அதேவேளை பொருளாதார நெருக்கடியால் , நிதி சவால்களை எதிர்கொள்ளும் இலங்கை, வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் முயற்சிகளில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளையும் முக்கிய பங்காளிகளாகக் கருதுகிறது.
அதோடு இருதரப்புக் கடன் வழங்குபவர்களிடம் 7.1 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுக்கொண்டுள்ள இலங்கை, அதில் கணிசமான பகுதியான 3 பில்லியன் டொலரை சீனாவுக்கு செலுத்தவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.