2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ராஜபக்சர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கைக்காக இந்திய தூதுவர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
ராஜபக்சர்களின் மீள்வருகையை நிராகரிக்க முடியாது என்றும் மிலிந்த மொரகொட சுட்டக்காட்டினார்.
மக்கள் மத்தியில் அதிருப்தி
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2022 இல் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பதவியிலிருந்து அகற்றப்பட்ட கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் குறித்து மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி காணப்படுகின்றன.
எனினும், 2024 ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சர்களுக்கு போட்டியிடுவதற்கான அனுமதி வழங்கப்படும்.
இலங்கை ஒரு ஜனநாயக நாடு . தற்போதைய அரசாங்கத்தில் ராஜபக்சர்களின் பிரதிநிதித்துவம் உள்ளது. அரசாங்கத்தில் ராஜபக்சர்களின் குடும்பத்தவர்கள் பலர் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.