முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்யும் ஐவரடங்கிய நீதிபதிகள் குழாமில் இருந்து நீதிபதிகளில் ஒருவர் விலகியுள்ளதாக இன்று (31) தெரிவிக்கப்பட்டது.
தனக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாட்டினை இரத்து செய்யுமாறு கோரி மைத்திரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறவுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்த போதிலும், முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் கொலை மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அருட்தந்தை சிறில் காமினி மற்றும் இருவர் கோட்டை நீதவான் நீதிமன்றில் தனிப்பட்ட முறைப்பாடு செய்திருந்தனர்.
அந்த முறைப்பாட்டை பரிசீலித்த கோட்டை நீதவான், பிரதிவாதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுத்தார்.
இந்த அழைப்பாணை சட்டவிரோதமானது என்றும் அது தொடர்பான தனிப்பட்ட முறைப்பாடு செல்லுபடியற்றது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.