யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரம் யாழ்ப்பாண உணவின் தரம் குறித்து இன்றைய தினம் (28.07.2023) கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இக்கலந்துரையாடலில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் சுகாதார வைத்திய அதிகாரிகள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் யாழ் வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள் யாழ் சுற்றுலாத்துறை அமைப்பின் பிரநிதிகள் மாநகர ஆணையாளர் பிரதேச சபை நகர சபை செயலாளர்கள் உணவுச்சாலை நடத்துபவர்கள் மேலதிக அரசாங்க அதிபர்கள் மாவட்ட உதவிச் செயலாளர் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
சுகாதார குறைப்பாடுகள்
இதன்போது கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரியினால் 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் கட்டளைச் சட்டம் குறித்தும் விற்பனை நிலையங்களின் சுகாதாரம் உணவின் தரம் அளவு உணவுக் கையாளுனர்களின் தகைமைகள் உணவுச் சாலைகளுக்கான பதிவு தரப்படுத்தல் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன் வெதுப்பக உணவுகளின் தரம் விற்பனை மற்றும் காணப்படும் சுகாதார குறைப்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும் யாழில் உற்பத்தி செய்யப்படும் மறக்கறிகளை விடுத்து கடலை பூசணி சோயாமீட் முதலியவற்றையே கறிகளாக அதிகளவில் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டும் அரசாங்க அதிபரால் முன்வைக்கப்பட்டது.
மேலும் உணவுச்சாலைகளில் கடமையாற்றுபவர்களுடைய மக்கள் தொடர்பு உடையமைப்பு இட வசதி குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.