நீதிமன்ற அனுமதியுடன் முல்லைத்தீவு – அளம்பில் வடக்கு பகுதியில் பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று (திங்கட்கிழமை) காலை விசேட அதிரடிப் படையினரால் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 13 பெரிய பராக்களும் ஒரு சின்ன பராவும் 82 மில்லிமீட்டர் மோட்டார் குண்டுகள் 49 உம 60 மில்லிமீட்டர் மோட்டார் குண்டு ஒன்றும், 6 ஆர் வி ஜி குண்டுகளும் 56 கைகுண்டுகளும் ஒரு தொகை தோட்டாக்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.