சீனாவுடன் இராணுவ ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், சீனா, இலங்கையில் இராணுவ ரீதியான நகர்வுகளை முன்னெடுக்கும் என தாம் கருதவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் பற்றி பேசப்பட்டாலும் அங்கு வர்த்தக ரீதியான நடவடிக்கைகளை மட்டுமே சீனா மேற்கொள்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு அச்சுறுத்தல்
எனினும் துறைமுகத்தின் பாதுகாப்பு கடமைகளை இலங்கை படையினரே மேற்கொண்டு வருகின்றனர் எனவும், தெற்கு கடற்படை தலைமையகத்தை ஹம்பாந்தோட்டைக்கு மாற்றும் உத்தேசம் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில் இலங்கையை பயன்படுத்த இடமளிக்கப்படாது என அவர் கூறியுள்ளார்.
இலங்கை ஓர் நடுநிலையான நாடு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.