மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக விசேட மக்கள் கலந்தாய்வு அமர்வு ஒன்று நடத்தப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, இது தொடர்பான பொது கலந்தாய்வு அமர்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறவுள்ளது.
அங்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது அல்லது குறைப்பது தொடர்பில் பொதுமக்கள் தமது கருத்துக்களைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளை சேர்ந்தவர்கள் உட்பட எவரும் இந்த பொது கலந்தாய்வு அமர்வின் போது இவ்விவகாரம் தொடர்பாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.