நேற்று நள்ளிரவு முதல் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் இன்றையதினம் சந்தையில் குறைக்கப்பட்ட விலையில் பேக்கரி உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், நாட்டின் சில பகுதிகளில் குறைந்த விலையில் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்ட நடவடிக்கை
குறைக்கப்பட்ட பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை கடையில் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவ்வாறு செய்யாத விற்பனை நிலையங்களுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல மேலும் தெரிவித்துள்ளார்.