முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்து முன்னிலைப்படுத்த தீர்ப்பளிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) பிடியாணை பிறப்பித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயித் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
இதன் போது கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களின் இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் போது கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களின் இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.