இந்தியாவில் மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்ததற்காக ஆசிரியை ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அந்த ஆசிரியை தன்னை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரி இந்தூர் உயர் நீதிமன்றத்தை அனுகியுள்ளார்
பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை, அரசு மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். மாநில அரசின் சுற்றறிக்கையின் பிரகாரம், ஊழியர் மூன்றாவது குழந்தை பெற்றால் அவரைப் பணியிலிருந்து நீக்க முடியும்.
இந்த விதியின்படி, அனைத்து வகையான தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று தன் தகுதியை நிரூபித்த ஒருவர், மூன்று குழந்தைகளின் பெற்றோராக இருந்தால் அவருக்கு அரசுப்பணி வழங்கப்படாது.
அப்பெண்ணுக்கு மூன்றாவது குழந்தை 2009ஆம் ஆண்டு பிறந்தது. ஆனால், 2020ஆம் ஆண்டுதான் அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்தப் புகாரின் அடிப்படையில் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது