82 பயணிகளை ஏற்றிய பேருந்தை மதுபோதையில் மற்றும் செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி அதிவேகமாக செலுத்திச் சென்ற சாரதி ஒருவரை கேகாலை பிரிவு போக்குவரத்து பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கம்பஹா கிரிடிவெல்ல டிப்போவிற்கு சொந்தமான பேருந்து கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்தபோது, யத்தோகம பகுதியில் வைத்து கேகாலை பொலிஸ் பிரிவில் வைத்து பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளது.
அந்த சாவீதியில் அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். எனினும், 77 கிமீ வேகத்தில் பேருந்தை செலுத்திச் சென்றுள்ளார். மேலும் அவரது சாரதியின் உரிமத்தை சோதனை செய்ததில், அது காலாவதியான ஓட்டுநர் உரிமம் என்பதும், அது புதுப்பிக்கப்படவில்லையென்பதும் தெரிய வந்தது.
இத்துடன், சாரதி குடிபோதையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
அப்போது பேருந்தில் 82 பயணிகள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்