நாட்டில் 2023 ஆம் ஆண்டு, அரச பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் முதல் தவணையின் 3ஆம் கட்டம் நாளை திங்கட்கிழமை (12-06-2023) ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலை தவணை நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்றையதினம் (11-06-2023) நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த கேட்டுக்கொண்டதற்கமைய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நேற்றையதினம் ஆரம்பமானது.
நுளம்பு பெருக்கமுள்ள இடங்களை கண்டறித்து அவற்றை துப்புரவு செய்யும் பணிகளில் ஈடுபடுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இந்த வேலைத்திட்டம் இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு முன்னெடுக்கப்படுவதாக அவா் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய கொழும்பில் உள்ள 144 பாடசாலைகளை உள்ளடக்கியவாறு மாதிரி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.