களுத்துறையில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த யுவதி ஒருவரைத் தாக்கி காயப்படுத்தி வீட்டின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இக் குற்றச்சாட்டில் மொரந்துடுவ பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வஸ்கடுவ பகுதியில் வசிக்கும் யுவதி ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 18 ஆம் திகதி இரவு சந்தேக நபர்களான சார்ஜன்டும் அவரது மனைவியும் குறித்த யுவதியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இந்த தாக்குதலை நடத்தியிருந்ததாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.