இந்தியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரின் சடல எச்சங்கள், கடவுச்சீட்டு என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆந்திர மாநிலத்திலே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அச் சடலம் யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த ஒருவரினுடைய இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
வழங்கப்பட்ட தகவல்
குறித்த விடயம் தொடர்பில் இந்திய காவல்துறையினரால் இலங்கை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் ரயில் பாதையின் அருகாமையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்திற்கு அருகாமையில் வீரதேவன் ஒழுங்கை, துன்னாலை மத்தி, கரவெட்டி சேர்ந்த 1947 ஆம் ஆண்டு பிறந்த அருணாச்சலம் சிவராசா என்பவரது கடவுச்சீட்டு மீட்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த மாதம் 21 ஆம் திகதி காசிக்கு யாத்திரைக்கு செல்வதாக கூறி இலங்கையிலிருந்து சென்றதாக கூறப்படுகிறது.