வரி செலுத்துவதற்கு அடுத்த வருடம் முதல் டிஜிட்டல் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
வரி செலுத்துவதை முறையான முறையில் மேற்கொள்ளும் வகையில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலியில் நேற்று (06.06.2023) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வரி செலுத்தும் வலையமைப்பு
அத்துடன், வரி செலுத்தும் வலையமைப்பை இனங்கண்டு அதனை விரிவுபடுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறுகையில், “அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல், புதிய விதிகளின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வருமான வரிக்கு பதிவு செய்ய வேண்டும்.
தற்போது மக்கள் பிரதிநிதிகளாக பணியாற்றும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருமான வரிப் பதிவேடுகளை ஆரம்பிக்கவுள்ளோம்.
யார் வரி செலுத்த வேண்டும்?