சிங்கப்பூரில் நடத்தப்பட்ட போட்டியொன்றில் தமிழரொருவர் 12 இலட்சம் ரூபா பணப்பரிசை வென்றுள்ளார்.
இது தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் ஊழியர்களை உற்சாகப்படுத்துவதற்காக இப் போட்டி இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தில் கடைநிலை ஊழியராக பணிபுரியும் செல்வம் ஆறுமுகம் (வயது 42) என்பவர் ராட்சத பலூனை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளார்.
பணமூட்டை அடங்கிய ராட்சத பலூனை அரங்கின் நடுவே தொங்கவிடப்பட்டு வெற்றியாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளதுடன் வெற்றி பரிசாக ரூ.12 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த சிலமாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று தன் ஊழியர்களுக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரம் உட்பட பல பரிசு பொருட்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.