யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்களுக்கு அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டால் அது தொடர்பாக முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, 0774653915 என்ற இலக்கத்துக்கு அழைத்து விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்க என்பவரை தொடர்புகொள்ள முடியும்.
அல்லது, ‘021 221 9373’ என்ற இலக்கத்துக்கு அழைத்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்ய முடியும்.
மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.