வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிசார் விசேட நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் வீதி சமிக்ஞை விளக்கு அமைப்புகளைப் புதுப்பிக்கும் வரையில், வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளைப் போக்குவரத்து பொலிஸார் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகள் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரையின் பேரில் முன்னெடுக்கப்படவுள்ளன.

கடந்த இரண்டு நாட்களாகப் பிரதான நகரங்களில் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை விளக்குகளுக்கு ஏற்ப முன்னெடுக்கப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கையின்போது அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிக வாகன நெரிசல் நிலவும் காலப்பகுதிக்கு ஏற்றவாறு சமிக்ஞை விளக்கு அமைப்பு மாற்றியமைக்கப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, அவற்றைத் திருத்தியமைக்கும் வரையில் குறித்த விளக்குகளின் செயற்பாடுகளை இடைநிறுத்தி, வாகன போக்குவரத்து கட்டுப்பாட்டினை போக்குவரத்து பொலிஸாரைக் கொண்டு முன்னெடுக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.