முதல் நாளிலே நாடாளுமன்ற ஆசனத்தில் மாறி அமர்ந்த அர்ச்சுனா !

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றம் இன்றும் ஜனாதிபதி அனுரகுமார தலமையில் பெருமளவான புதிய உறுப்பினர்களுடன் ஆரம்பமானது.

முதல் நாள் அமர்வான இன்று உறுப்பினர்கள் எந்தவொரு ஆசனத்திலும் அமர முடியும் என்ற கோட்பாட்டின் உள்நுழைந்தனர்.

வேறு இடத்திற்கு மாற்றிய பணியாளர்கள்

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற மருத்துவர் அருச்சுனா அங்கு எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்தால் குழப்ப நிலை ஏற்பட்டது.

எனினும் அங்கிருந்த அதிகாரிகள் அது எதிர்க்கட்சித் தலைவருக்கான ஆசனம் வேறு ஆசனங்களில் அமரும்படி கோரினர். எனினும் இன்றைய நாள் விதிமுறைகளை கூறிய அர்சுர்னா அதிகாரிகளுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட பின்னர், ஆசனத்தை மாற்றிக் கொண்டார்.

எந்தவொரு ஆசனத்திலும் அமரலாம் என்ற விதிமுறை நடைமுறையில் இருந்தாலும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆசனங்கள் அமர முடியாது என்பது மரபு.

அதேவேளை புதிய நாடாளுமன்றின் எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

அதேவேளை புதிய நாடாளுமன்றின் எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது