மீண்டும் எதிர்க்கட்சி தலைவராக சஜித்

இலங்கையில் நடந்து முடிந்த நாடாளும்ண்ற தேர்தலை அடுத்து ஞ்னாதிபதி அனுர தலமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் பத்தாவது நாடாளும்னறத்தின் கன்னி அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் மீண்டு எதிர்கட்சித்தலைவராக சஜித் பிரேமதாச அமரவுள்ளார்.

அதேசமயம் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க ரன்வல, பிரதி சபாநாயகராக முஹம்மத் ரிஸ்வி சாலி, பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக ஹேமாலி வீரசேகர, சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, ஆளுங்கட்சி பிரதம கொறடா நளிந்த ஜெயதிஸ்ஸவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, முற்பகல் 11:30 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

அரசியலமைப்பில் 33 (அ) உறுப்புரையின் படி பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சபையில் சமர்ப்பிப்பதற்கும் அரசியலமைப்பின் 33 (ஆ) உறுப்புரைக்கு இணங்க பாராளுமன்றத்தில் வைபவ ரீதியான அமர்வுகளுக்கு தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகிறது.

அந்த வகையில் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான விளக்கமான கொள்கை பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.