வெளிநாட்டு பிரஜைகள் கைது!

வீசா காலத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் 08 பேர், கட்டுநாயக்க பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள், ஆதியம்பலம், கோவை பகுதியில் சுற்றுலா விடுதியில் வைத்து திங்கட்கிழமை (18) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரான் மற்றும் சவூதி அரேபியாவிற்கு தப்பிச் செல்ல திட்டம்
20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இவர்கள் இலங்கையின் குடிவரவு நிபந்தனைகளை மீறி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியுள்ளனர்.

அதேவேளை கைதானவர்கள் ஈரான் மற்றும் சவூதி அரேபியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கிலேயே தங்கிருந்ததாக தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்வதற்கு மொழிபெயர்ப்பாளரின் உதவியை பொலிஸார் பெற வேண்டியிருந்தது.

கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திங்கட்கிழமை (18) இரவு அடியம்பலம், கோவின்ன பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த சுற்றுலா ஹோட்டல் சுற்றிவளைப்புக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் இன்று (19) ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.