தேர்தல் சட்டத்தை மீறிய பேருந்து பொலிசார் அதிரடி!

இலங்கையின் 10 நாடாளுமன்ற தேர்தல் இன்று இடம்பெறும் நிலையில், தேர்தல் சட்டத்தை மீறிய மூன்று பேருந்துக்கள் அதன நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுரைச்சோலையில் இருந்து முல்லைத்தீவுக்கு வாக்காளர்களை ஏற்றிச் செல்வதற்காக மூன்று பஸ்கள் தயார் நிலையில் இருந்த நிலையில், அவற்றின் மூன்று சாரதிகள் மற்றும் மூன்று நத்துனர்கள் நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 83 (1)ஆ பிரிவின் பிரகாரம் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபரான சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் மணல்தோட்டம், ஏஜி முகாம், ஏத்தாளை, கல்பிட்டி, மாம்புரி ஆகிய இடங்களில் வசிக்கும் 25 தொடரக்கம் 45 வயதுடையவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் கைதான சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி கல்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.