மொட்டுக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளராக கீதநாத் காசிலிங்கம் நியமனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்.மாவட்ட அமைப்பாளராக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொட்டுக் கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்றையதினம் (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் யாழில் நடைபெறும் பரப்புரைகள், பொதுக்கூட்டங்கள், மேம்பாட்டுப் பணிகள் மற்றும் ஊடகங்களுக்கான கருத்துகள் உள்ளிட்ட மொட்டுக் கட்சி சார்ந்த அனைத்து செயற்பாடுகளும் கீதநாத் காசிலிங்கத்தின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.