நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சியின் சார்பாக யானை சின்னத்திலும் சிலிண்டர் சின்னத்திலும் போட்டியிடும் வேட்பாளர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பாவிட்டால் முட்டையின் விலை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமென ஜக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஜக்கிய தேசிய கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நேற்றைய தினம் (10) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டு மக்கள் அனுர குமார திஸாநாயக்கவை (Anura Kumara Dissanayake) தெரிவு செய்தனர்.
ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் நாடாளுமன்றத்தை கலைத்தார் எதற்காக நாடாளுமன்றத்தை கலைத்தார்.
அவருடைய வேலைத்திட்டம் என்னவன்று கூற வேண்டும், தேவைப்படும் பிரச்சினைகள் தொடர்பாக பேசப்படுவதில்லை.
தேங்கியிருந்த விலை அதிகரித்துள்ளது வேண்டுமானால் கேரளாவுக்கு சென்று தேங்காய் கொண்டு வரட்டும், நாடாளுமன்றத்தை சுத்தம் செய்வதற்கு வாக்களிக்குமாறு கூறுகின்றனர் யாருக்கு வாக்களிப்பது தேசிய மக்கள் சக்தியில் வேட்பாளர்களின் பெயர்கள் கூட தெரியாது.
எமது கட்சியிலும் ஜக்கிய மக்கள் சக்தியிலும் மக்களுக்கு தெரிந்த வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.