டிக்டோக் குறித்து கனேடிய அரசு மேற்கொண்டுள்ள தீர்மானம்!

தேசிய-பாதுகாப்பு அபாயங்களை மேற்கோள் காட்டி, சீனாவுக்குச் சொந்தமான டிக்டோக் (TikTok) இன் அலுவலகங்களை நாட்டில் மூடுவதற்கு கனடா உத்தரவிட்டது.

எனினும், கனேடியர்கள் குறுகிய வீடியோ செயலிக்கான அணுகல் அல்லது பதிவேற்றம் மேற்கொள்வதற்கான செயல்களுக்கு அரசாங்கம் தடை விதிக்கவில்லை.கனடாவின் பாதுகாப்பு, உளவுத்துறை சமூகம், பிற அரசாங்க பங்காளிகளின் ஆலோசனையின் பேரில், ஆய்வுகளின் போது சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஒட்டாவா கடந்த ஆண்டு கனடாவில் தனது வணிகத்தை முதலீடு செய்வதற்கும் விரிவாக்குவதற்கும் டிக்டோக்கின் திட்டத்தை மதிப்பாய்வு செய்யத் தொடங்கியது.

இதனிடையே டிக்டோக்கின் பிரதிநிதி ஒருவர், நிறுவனம் இந்த முடிவை எதிர்த்துப் போராட விரும்புவதாகக் கூறினார்.

டிக்டோக்கின் கனேடிய அலுவலகங்களை மூடுவது மற்றும் நூற்றுக்கணக்கான ஊதியம் பெறும் உள்ளூர் வேலைகளை அழிப்பது எவருக்கும் சிறந்தது அல்ல.

இந்த உத்தரவுக்கு எதிராக நாங்கள் நீதிமன்றை நாடவுள்ளோம் என்று அவர் கூறினார்.