எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைப்பு!

எரிபொருள் விலை குறைப்பு போதுமானதாக இல்லை என அகில முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழிற்சங்க தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 31 ஆம் திகதி நள்ளிரவுடன் நடைமுறையாகும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டது.

அதாவது ஒக்டைன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 371 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையும் 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 313 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

குறைக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை: எழுந்துள்ள குற்றச்சாட்டு | Criticism Rises Over Fuel Prices In Srilanka

எனினும், மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் ஒக்டைன் 92 ரக பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறைக்கப்படவில்லை. இதனால் மக்களிடையே இந்த விடயம் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறைக்கப்படும் கட்டணங்களின் பயன் பொதுமக்களைச் சென்றடைய வேண்டுமென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.