நில்வலா கங்கைக்கு அண்மையில் வெள்ள அபாய எச்சரிக்கை!

நில்வலா கங்கைக்கு அண்மித்த பிரதேசங்களின் பல இடங்களில் இன்று (24) காலை கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி  பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நில்வலா கங்கையின் ஒரு பகுதியில் சிறு அளவில் வெள்ள நிலைமை உருவாகியுள்ளது.

இன்று (24) கணிசமான மழைவீழ்ச்சி ஏற்பட்டால் இந்த நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய தற்போது பாகொட, கொடபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்திரலிய, மாலம்பட, கம்புறுபிட்டிய, திஹகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேச செயலக பிரதேசங்களில் தாழ்வான பகுதிகளில் வௌ்ள அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்களும், அவ்வழியாகச் செல்லும் வாகன சாரதிகளும் இந்த நிலைமையை மிகுந்த அவதானத்துடன் கையாளுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக் கொள்கிறது.